Update: தொழிற்சங்க நடவடிக்கையை தொடர புகையிரத நிலைய அதிபர்கள் தீர்மானம்!

Date:

அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையை  முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இன்று (27) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளிலிருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

புகையிரத சமிக்ஞை முறைமையில் நிலவும் குறைபாடுகள் திருத்தப்படல் மற்றும் தொடருந்து பயண கால அட்டவணையை மீளமைத்தல் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி புகையிரத அதிபர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...