ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மத்தியில் பிரதமர்

Date:

பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (06) முற்பகல் அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யும் போது இதனைவிட அதகளவிலான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

வரலாற்றில் தன்னுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட உறுப்பினர்களை பார்த்த பிரதமர், கடந்த காலங்களில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட விதம் குறித்து அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாகிர் மாகர், பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் இவ்வாறு கௌரவ பிரதமருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...