எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணி இலங்கைக்கான சுற்றுத்தொடர் ஒன்றில் பங்கேற்கவுள்ளது.
மேலும், இந்த தொடரில் பங்கேற்கும் சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதனடிப்படையில் குறித்த மூன்று போட்டிகளும் கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.