ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் உள்வாங்கல்!

Date:

இலங்கையில் ´ஒரே நாடு, ஒரே சட்டம்´ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகையான சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொண்டுள்ளதாக, குறித்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்ட உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு வந்து கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, டிசம்பர் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இந் நாட்களில், மதத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் மற்றும் பௌத்த மத அமைப்புகள் மற்றும் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு வருகை தந்தனரென்று, தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய அலுவலகத்திற்கு வரும் மக்கள், இனம், மதம் அல்லது மாகாணம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், குறிப்பாக ´ஒரே நாடு, ஒரே சட்டம்´ என்ற புதிய கருத்தாக்கத்தில் ஆர்வமாக இருந்ததாகவும்,வடக்கு, கிழக்கு உட்பட பெரும்பாலான மக்கள், இந்தக் கருத்து யதார்த்தமாக மாறுவதைக் காண மிகவும் ஆவலுடன் இருப்பது, நாட்டின் அபிவிருத்திக்கு ஒரு சக்திவாய்ந்த தூண்டுகோலாகும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் மற்றும் நிறுவன ரீதியாக தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவிக்க விரும்பும் அனைவருக்கும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதோடு குறித்த யோசனைகள் அனைத்தையும் தானும் தனது குழுவினரும் எந்த நேரத்திலும் சேகரிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

´ஒரே நாடு, ஒரே சட்டத்தை´ அமல்படுத்துவதற்கான ஆய்வை நடத்தி, புதிய சட்டமூலத்தை உருவாக்கும் பணியைத் தனக்கும் தனது குழுவுக்கும் அளித்துள்ளதாகக் கூறிய அவர், உரிய காலத்தில் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

´ஒரே நாடு, ஒரே சட்டம்´ என்ற தலைப்பிலான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் திருமதி. ஜீவந்தி சேனாநாயக்க மற்றும் செயலணி உறுப்பினர்களும், இதன் போது கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...