நாட்டின் பல உணவகங்களுக்கு அபராதம்- நீதிமன்றம் உத்தரவு!

Date:

மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான மூன்று உணவகங்கள் உட்பட ஏழு உணவகங்களை தலா பத்தாயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டுமென மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.எம் ரிஸ்வான் இன்று (02) வியாழக்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடீர் முற்றுகையிட்ட போது சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக பின்பற்றாது செயல்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவகங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.

இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்த போது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் எழுபதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிவான் ஏ.சி.எம் ரிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...