போதைப் பொருள் அறிக்கை தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியின் அதிரடி தீர்மானம்!

Date:

போதைப்பொருள் தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதற்கான கால எல்லை இரண்டு வாரங்களாக குறைக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

பகுப்பாய்வாளர் திணைக்களத்திடமிருந்து அறிக்கைகளைப் பெறுவதற்கு சுமார் எட்டு மாதங்களானதாகவும் அது ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தகைய அறிக்கைகளை உடனடியாக பெற்றுக் கொள்வதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...