மனித நேயத்தையும் அமைதியையும் தந்த நத்தார் தினத்தை பக்தியுடன் கொண்டாடுவோம்- சஜித் பிரேமதாசா!

Date:

மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த இயேசு நாதரை நினைவுகூரும் ஒரு சிறப்பு நாள் நத்தார் தினமாகும்.

அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் கருப்பொருளான நத்தார் தினம், கிறிஸ்தவர்களின் சமயப் பண்டிகை மட்டுமல்ல, இனம், மதம், கட்சி, நிறம், சிறியோர், இளைஞர்கள்,பெரியவர்கள் என்ற பேதமின்றி உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களால் கொண்டாடப்படும் கலாசார விழாவாகும்.

“நல்லவன் தன் இதயத்தில் நல்லதை விதைப்பான், கெட்டவன் தன் இதயத்தில் கெட்டதை விதைப்பான்” என்று பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த விதத்திலும், மனிதாபிமானம் நிறைந்த விதத்திலும் நாட்டிற்கும், உலகிற்கும் தன்னை அர்ப்பணிக்க ஆண்டவர் இயேசு வழி காட்டியுள்ளார் என்பதை இது காட்டுகிறது.

ஆண்டவர் மனிதராகி சுவர்க்கத்திலிருந்து மனித உலகிற்கு வந்து மனித உடலில் வாழவும், மனித குடும்பத்தில் வளரவும் விரும்பியதால், மனித வாழ்க்கையின் மர்மமான தன்மையையும், அதன் உயர்ந்த மதிப்பையும் இயேசு நாதர் நமக்கு வெளிப்படுத்துகிறார்.எனவே, அந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும், அனைத்து மனிதர்களையும் மதிக்கும் மனிதாபிமான மனநிலையைக் கொண்டிருப்பதற்கும், இயற்கை மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற ஆழ்ந்த உணர்திறன் கொண்ட ஒரு தனித்துவமான செய்தியை நத்தார் நமக்கு வழங்குகிறது.

இயேசு நாதர் உலகிற்கும், அனைத்து நாடுகளின் மக்களுக்கும் கொண்டுவந்த அன்பு மற்றும் கருணையின் மகத்துவத்தை மனிதகுலம் முன்மாதிரியாகப் பின்பற்றி நத்தார் விடியலைக் கொண்டாடுவது அவசியம். இதயத்தை சோகப்படுத்தும் தீய எண்ணங்களை அழித்து, நத்தாரின் உண்மையான அம்சத்தை உணர்ந்து, அன்பான குடிமகனாக ஒருவரின் வாழ்க்கையை வடிவமைக்க நத்தார் தினம் பெரும் உதவியாக உள்ளது.

முனிவர்கள் கண்ட நட்சத்திரம், இயேசு குழந்தை வாழ்ந்த மாட்டுத் தொழுவத்தின் மேல் வானத்தின் ஒளிப் பிரகாசத்துடன் எல்லையற்ற அன்பும் அமைதியும் தரும் செய்தியை எடுத்துரைத்த ஆண்டவர் குழந்தை பிறப்பானது உலகிற்கு ஒளிக்கீற்றைக் கொண்டு வந்தது.

இன்று இலங்கையர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் மிகவும் கடினமான காலமாகும். ஒரு வைரஸ் இரண்டு ஆண்டுகளாக மனித வாழ்க்கையின் இயல்பான செயற்பாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை மனதில் வைத்து நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம்.

இந்த நேரத்தில், மிகவும் கடினமான காலங்களில் வாழும் உங்கள் மீதும் உங்கள் அயலவர்கள் மீதும் உங்களால் முடிந்த அளவு கவனம் செலுத்த முடிந்தால், நத்தாரின் உண்மையான அர்த்தம் உங்கள் இதயத்தில் பாதுகாப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

‘உங்களுக்கு கண்ணுக்குக் கண் என்றே கற்றுத் தரப்பட்டுள்ளது. கல்லால் தாக்கினால் பாறையால் திரும்பித் தாக்கி நீதியைப் பெற்றுக் கொள் என்றாகும். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளை நேசியுங்கள். உங்களை வெறுப்பவர்களையும் துன்புறுத்துபவர்களையும் நீங்கள் நேசியுங்கள் என்றாகும்.அந்த மகத்தான மற்றும் உன்னதமான செய்தியைக் கொண்டு வந்த இயேசு குழந்தை பிறந்த சிறப்புமிக்க நாளை நாம் அர்த்தமுள்ள முறையில் கொண்டாடுவோம் என முன்மொழிகின்றேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எனது நத்தார் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...