இலங்கையின் முதலாவது அரபு மொழிப் பேராசிரியராக கலாநிதி எம்.எஸ்.எம். சலீம் பதவியுயர்வு!

Date:

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம் சலீம் அரபு மொழித்துறை பேராசிரியராக  பதவியுயர்தப்பட்டுள்ளார். அரபு மொழியில் அவருக்குள்ள ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும்  இந் நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எஸ்.எம். சலீம் மாவடிப்பள்ளி முஸ்லிம் கலவன் பாடசாலையில் தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து அங்கேயே  ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தார். சில காலம் கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியில் கற்றதன் பின்னர் இந்தியாவின் லக்னோ தாருள் உலூம் நத்வதுல் உலமா அரபுக் கல்லாசாயின் அரபு மொழி மற்றும் இலக்கிய பீடத்தில் கற்று முதலாம் நிலை அதிவிஷேட சித்தியுடன் தனது இஸ்லாமிய கற்கையை நிறைவு செய்தார்.

1999ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் 2002 இல் அரபு மொழியில் விஷேட இளங் கலைமானிப் பட்டத்தை பெற்றார். 2004 ஆம் ஆண்டு அரபு மொழியில் முதுகலைமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதோடு, 2012 ஆம் ஆண்டு உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் அரபு மொழியியலில் கலாநிதிப் பட்டத்தையும் பூர்த்தி செய்தார். பேராசிரியரின் கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வுக்கு விஷேட திறமையை வெளிப்படுத்தியதற்கான Excellent Award பல்கலைக்கழகத்தால் வழங்கி கெளரவிக்கப்பட்டையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பிரித்தானியர் ஆட்சியின் கீழ் 1945ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதலாவது உபவேந்தராக இருந்த Sir Ivor Jennings, Faculty of Orientalism என்பதற்குக் கீழ் அரபு மொழியையும் ஒரு துறையாகக் கொண்டு வந்தார். அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இமாம் அவர்கள் அரபு மொழித்த்துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் இமாம் அவர்களுக்குப் பின்னர் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் அரபு மொழித் துறையில் பேராசிரியராக உயர்வு பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...