2022 ஆம் ஆண்டின் ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Date:

அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் இடம்பெறவுள்ள ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (21) வெளியிட்டுள்ளது.

சூப்பர் 12 சுற்றுக்கு நேரடி தகுதி பெறாத இலங்கை அணி, முதல் சுற்றில் நமீபியா, ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள முதல் சுற்றின் முதலாவது போட்டியில் இலங்கை அணி, நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டி ஒக்டோபர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த போட்டியில் நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.அதேநேரம், எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...