இலங்கை 19 வயதின்கீழ் அணி 40 ஓட்டங்களால் அபார வெற்றி

Date:

சகுன நிதர்ஷன லியனகேவின் அபார துடுப்பாட்டம் மற்றும் அணித்தலைவர் துனித் வெல்லாலகேவின் மாயாஜால சுழல் என்பவற்றின் மூலம் ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை 19 வயதின்கீழ் அணி 40 ஓட்டங்களால் அபார வெற்றயீட்டியது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 14ஆவது தடவையாக நடத்தப்படும் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்று (14) மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகியது.

இதில் முதல் போட்டியில் வரவேற்பு நாடான மேற்கிந்தியத் தீவுகள் 19 வயதின் கீழ் அணியை அவுஸ்திரேலிய அணி 19 வயதின்கீழ் அணி எதிர்கொள்ள, இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணியை இலங்கை 19 வயதின்கீழ் அணி எதிர்கொண்டது.

இந்த நிலையில், இலங்கை – ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணிகள் மோதிய போட்டி கயானாவின் எவரெஸ்ட் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, தனது தரப்பிற்காகப் பெற்றார்.

ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணியால் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் துனித் வெல்லாலகே தனது மாயஜால சுழல் மூலம் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

அதேபோல, ஷெவோன் டேனியல் 2 விக்கெட்டுகளையும், மதீஷ பத்திரன மற்றும் வனுஜ சஹன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீpழ்த்தினர்.

இதன்படி, 40 ஓட்டங்களால் வெற்றயீட்டிய இலங்கை 19 வயதின்கீழ் அணி, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தைப் பெற்றது.

நன்றி த பபரே

Popular

More like this
Related

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...