எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!

Date:

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நள்ளிரவில் முதல் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த காலப்பகுதியில் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த தடை விதி முறைகளை மீறி எவரேனும் செயற்படுவாராயின் அது பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, பொலிஸ் தலைமையகத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி. தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...