கொவிட் பரவல் காரணமாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு!

Date:

கொவிட் பரவல் காரணமாக, சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து வடகொரியாவின் ஒலிம்பிக் சபை மற்றும் விளையாட்டு அமைச்சகம் சீனாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வடகொரியாவுக்கு எதிரான விரோத சக்திகளின் நகர்வுகள் மற்றும் கொவிட் பரவல் சூழ்நிலை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை எனவும், ஆனால் சீனா நடத்தும் ஒலிம்பிக் போட்டியை முழுமையாக ஆதரிப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியில் புறக்கணிப்பது ஒலிம்பிக் போட்டியை அவமானப்படுத்துவது போன்றது எனவும் வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...