சக வாழ்வை பலப்படுத்த உதவும் “பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்” நூல் வெளியீட்டு விழா!

Date:

வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.நவாஸ் (ஸலாமி) எழுதிய ‘பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 10 மணிக்கு வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வரையறுக்கப்பட்ட மக்கள் சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கலீல் ரஹ்மான் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன் மற்றும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூலாசிரியரின் கன்னி வெளியீடான இந் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண ஊழியர் சேமலாப நிதியத்தின் மாகாணப்பணிப்பாளர் ஏ.தாஹிர், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.எல்.அமீன், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை பொலிஸ் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...