சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது -லிற்றோ நிறுவனம்!

Date:

சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை.இதேவேளை, சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்திலிருந்து தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் என்று குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாளாந்த எரிவாயு சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் இரண்டு இலட்சமாகக் காணப்பட்டது.

எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக காணப்படுகின்றது. இதன்படி, குறித்த நிறுவனம் தற்போது நாளாந்தம் 90 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கின்றது. எனினும், இரண்டரைக் கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறு தாமதம் நிலவுதாகவும் லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...