பாகிஸ்தானில் கடும் பனிப் பொழிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

Date:

பாகிஸ்தானில் சுற்றுலா சென்று கடும் பனிப் பொழிவில் சிக்கி கார்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரீ பகுதிக்கு ஆயிரக்கணக்கான கார்களில் சுற்றுலா சென்ற மக்கள், கடும் பனி பொழிவில் சிக்கி திரும்ப முடியாமல் ஸ்தம்பித்து போனதாக கூறப்படுகிறது.

கடும் குளிரிலிருந்து தப்பிக்க கார் கண்ணாடிகளை மூடியதால் மூச்சுத் திணறல் மற்றும் உறை பனி குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கார்களில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 22 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பனியில் சிக்கிக் கொண்ட ஆயிரத்து 122 பேரை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...