பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸிக்கு கொவிட் தொற்று உறுதி!

Date:

ஆா்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மெஸியுடன் சேர்ந்து பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் நான்கு வீரர்களுக்கு கொவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.பிரெஞ்சுக் கிண்ணத்தை இவ் அணி விளையாட இருந்த நிலையில், தற்போது அணியில் நான்கு வீரர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணியில் ஊழியர் ஒருவருக்கு முதலில் கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீரர்கள் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதன் முடிவில் 7 முறை பேலோன் தோர் விருதை வென்ற பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, ஜூயன் பெர்னட், செர்ஜியோ ரிகோ மற்றும் 19 வயதான நேதன் பிடுமஸாலா ஆகியோருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...