தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் இன்று(22) கடந்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை சுகாதார வழிகாட்டல்களுடன் நடத்தப்படவுள்ளது.2,943 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில், 340,508 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
மாணவர்களை உரிய காலநேரத்திற்குள் பரீட்சை மையங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.