கொவிட் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் ஜனவரி 8 முதல் உள் வருவதற்கு ஹொங்கொங் அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.
ஒமிக்ரோன் வகை கொவிட் தொற்றுப் பரவல் அதிகமாக பரவியுள்ள அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளிலிருந்து விமானங்கள் வருவதை ஹொங்கொங் அரசு தடை செய்துள்ளது.
இந் நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் ஹொங்கொங்குக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிப்பதன் நோக்கம் கொவிட் பரவலைத் தடுப்பதற்குத் முக்கியமான ஒன்றாகும் என ஹொங்கொங் ஜனாதிபதி கேரி லேம் தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/7382473689/posts/10160516420948690/?sfnsn=mo