கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களின் போக்குவரத்துக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரோட்ரிகோ ஆப்ரின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர்,
கொவிட் தொற்று பரவல் காலத்தில் மக்களின் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார்.மக்களின் போக்குவரத்துக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் கண்மூடித்தனமாகக் கட்டுப்பாடுகள் விதிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை என்று கூறிய அவர், பெரும்பாலான சமயங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.