சவுதி அரேபியாவில் நீர்வீழ்ச்சி ஒன்று கடும்பனி காரணமாக உறைந்து பனிக்கட்டியாக மாறி நிற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தபூக் நகரின் அருகில் உள்ள அல்லோஸ் (Allouz) மலைப்பகுதிகளில் நீர் வீழ்ச்சிகள் உள்ளன. இந் நிலையில் கடந்த 20 ஆம் திகதி சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உறைபனி மற்றும் ஆலங்கட்டி. மழை பெய்தது.இதன் விளைவாக மலைகளுக்கு இடையில் இருந்த நீர் வீழ்ச்சி ஒன்று உறைந்து பனிக்கட்டியால் செய்த சிற்பமாக காட்சியளிக்கிறது.