இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கையினரின் கலாச்சார மன்றத்தின் ஒருங்கிணைப்பில் சுமார் 1.2 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மினி ஒட்சிசன் செறிவூட்டிகளின் ஒன்பது அலகுகள் இலங்கையின் சுகாதாரப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது .
இந்த மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆதரவுடன் ஒருங்கிணைப்புச் செய்துள்ளது.
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை மக்களின் உயிர்களைக் காக்க உதவும் முகமாக சரியான நேரத்தில் உரிய நன்கொடைகளை வழங்கியமைக்காக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை சமூகம் மற்றும் ரியாத்திலுள்ள இலங்கையின் கலாச்சார மன்றத்தை தூதரகம் பெரிதும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.