சுகாதாரத்துறையின் விசேட கோரிக்கை!

Date:

நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தை விட தற்போது ஒக்சிஜன் வழங்க வேண்டியுள்ள கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும், ஆனால் இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடனும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்´ என்று சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறினார்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் தேவையான சட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...