சூடானில் ராணுவ அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 3 பேரை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அங்கு ராணுவ ஆட்சியை நீக்கி, ஜனநாயக ஆட்சியை நடைமுறைபடுத்த வேண்டுமென மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 60 பேர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட அப்துல்லா ஹம்டோக் நாட்டை பேரழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து விட்டதாகக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். 3 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.