பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு முதன் முறையாக  பெண் நீதிபதி நியமனம்!

Date:

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு முதன் முறையாக  பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதற்கு பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று (06) ஒப்புதல் அளித்துள்ளது.

ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீதிபதி ஆயிஷா மாலிக் முன்னணி கார்ப்ரேட் மற்றும் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார்.பின்னர் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 20 ஆண்டுகள் பணியாற்றி தற்போது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகியுள்ளார்.கரும்பு விவசாயிகளுக்கு கூலி வழங்குதல், தேர்தலில் சொத்து அறிவிப்பு வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...