டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒழிப்புத்திட்டம்!

Date:

இந்த  ஆண்டின் முதல் ஐந்து நாட்களுக்குள் 1,227 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், டெங்கு நோயைப் பரப்பும் பிரதான 4 வகையான வைரஸ் வகைகளின், மூன்றாவது வைரஸ் வகையினால் தொற்றுக்குள்ளாகிய டெங்கு நோளாயர்களும் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின், சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இந்த வேலைத் திட்டம் ஜனவரி 04 முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும். இதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய, டெங்கு அவதானம் கூடிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...