பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கு முதன் முறையாக பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதற்கு பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று (06) ஒப்புதல் அளித்துள்ளது.
ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீதிபதி ஆயிஷா மாலிக் முன்னணி கார்ப்ரேட் மற்றும் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார்.பின்னர் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 20 ஆண்டுகள் பணியாற்றி தற்போது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகியுள்ளார்.கரும்பு விவசாயிகளுக்கு கூலி வழங்குதல், தேர்தலில் சொத்து அறிவிப்பு வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.