மேற்கு வங்காளத்தில் விரைவு புகையிரதம்  கவிழ்ந்து விபத்து

Date:

மேற்கு வங்காளத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு புகையிரதம் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற கவுகாத்தி- பிகேனிர் விரைவு புகையிரதம் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.புகையிரதம்  விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும் 20 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்த நிலைமையை விவரித்துள்ளதாகவும் விரைவான மீட்புப் பணிகளுக்கான நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த புகையிரதம் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வடகிழக்கு ரெயில்வே, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 45 க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அனோஜன் வழக்கில் சிறப்பு சட்டத்தரணிகள் குழு பேச்சுவார்த்தை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வது...

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, இலஞ்சம்...

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒப்பற்ற ஆசிரியர்.

படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான்...

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான்...