இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் 14 முன்னெடுத்திருந்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நேற்று நள்ளிரவு தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.