37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதிலிருந்து மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனடிப்படையில் 8 நாட்களுக்கு போதுமான டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.