43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் !

Date:

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்ட மூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கேற்ப சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இலங்கை இராஜதந்திர சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தடுப்புக் காவல் ஆணைகள், தடை உத்தரவுகள், உத்தரவுகளை நீதித்துறை மறு ஆய்வு செய்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பது, நீண்ட கால காவலில் வைப்பதைத் தடுப்பது ஆகியவற்றை விரைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

நீதவான்கள் மற்றும் நீதித்துறை வைத்திய அதிகாரிகளை அணுகுவதற்கும், தடுப்புக்காவலின் போது சித்திரவதைகளைத் தடுப்பதற்கும், நாளாந்தம் வழக்குகளை விசாரிப்பதற்கும் விசேட திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணையின்...

அனோஜனின் மேன்முறையீட்டுக்காக 5 பேர் கொண்ட குழு சவூதி பயணம்!

இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

பிரபல இஸ்லாமிய அறிஞரும் சிந்தனையாளருமான கலாநிதி அப்துல்கரீம் பக்கார் அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு.

சமகால இஸ்லாமிய உலகின் சிந்தனையாளர்களில் ஒருவரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி அப்துல்கரீம்...