U19 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை அணி!

Date:

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக துனித் வெல்லாலகே 52 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...