U19 WORLD CUP Update: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இலங்கை அணி!

Date:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று (21) இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லலா 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சதிஷ ராஜபக்ஷ 76 ஓட்டங்களையும், அஞ்சல பண்டார 40 ஓட்டங்களையும் பெற்றனர்.இதன்படி, இலங்கை அணி இதுவரை கலந்து கொண்ட மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...