இன்றைய வானிலை அறிக்கை!

Date:

நாட்டில் மன்னார், அம்பாறை, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இம் மாதத்தின் இரவு வேளைகளில் வழமையாக நிலவும் வெப்பத்தை விடவும் அதிக வெப்பம் பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு, சில மாவட்டங்களில் வழமையான வெப்பநிலை மேலும் வீழ்ச்சியடையக்கூடும்.குறிப்பாக புத்தளம், மன்னார், அநுராதபுரம், கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பகல் வேளையில் நிலவும் வழமையான வெப்பநிலையின் அளவு வீழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல், கண்டி, காலி மற்றும் இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களும் அதில் உள்ளடங்குகின்றன.அத்துடன் இந்த மாதம் கேகாலை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம்

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...