இன்றைய வானிலை அறிக்கை!

Date:

மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில்  பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்

Popular

More like this
Related

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...

வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்; இலங்கைக்கு IMF வலியுறுத்து!

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மீள்திறனை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை...

ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே இடையில் சிறையில் மோதல்!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சிந்தக்க...