Friday, November 13, 2026

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!

1 min read · 1 reads

கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம் மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் http://(www.doenets.lk)அல்லது

http://www.onlineexams.gov.lk/eic அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலி ஊடாக (Mobile App ‘Exams) விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரச பாடசாலை மாணவர்கள், சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.