தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து தீவிர விசாரணை!

Date:

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேல்முறையீடுகளை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.இதன்படி அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தினை மையப்படுத்தி கடந்த தினம் மேன்முறையீட்டு விசாரணைகள் இடம்பெற்றன.மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி அடுத்த சில வாரங்களில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல், தகவல்களை வழங்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளில் பெரும்பாலானவை பிரதேச செயலகங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராகவும் கணிசமான எண்ணிக்கையிலான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

இன்று முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள்...