தனுஷ்க குணதிலக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு (SLC) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது bio-bubble ஐ மீறிய குற்றத்திற்காக குணதிலக தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஜூன் வரை தடை செய்யப்பட்டுள்ளார்.இலங்கை அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள துடுப்பாட்ட வீரர், கடந்த வாரம் தனது ஓய்வுக் கடிதத்தை SLC க்கு கையளித்ததாக அறியக் கிடைக்கிறது .

அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்த பின்னர், குறிப்பாக விளையாட்டின் குறுகிய பதிப்புகளில் தனது உடற்தகுதி நிலைகளில் கவனம் செலுத்தும் வகையில் தான் இந்த முடிவை எடுத்ததாக தனுஷ்க குணதிலக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், குறுகிய பதிப்புகளின் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாக குணதிலக்க தெரிவித்துள்ளார்.

“எனது நாட்டிற்காக விளையாடுவது எப்போதுமே ஒரு கெளரவமாகும், மேலும் எதிர்காலத்தில் நான் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் எனது சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...