துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlut cavusoglu ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (28) இலங்கை வந்துள்ளார்.அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் நாட்டுக்கு வந்துள்ளது.
துருக்கியின் விசேட விமானம் மூலம் இன்று காலை 6.00 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துருக்கி குடியரசின் வெளிவிவகார அமைச்சர் Mevlüt Çavuşoğlu, 2022 ஜனவரி 28-30 திகதிகளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் மாலைதீவுக் குடியரசிற்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக துருக்கிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும், தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களும் கலந்துரையாடலின் போது விவாதிக்கப்படும்.
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இன்று விஜயத்தை நிறைவு செய்து பிற்பகல் 3.15 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.