துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

Date:

துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlut cavusoglu ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (28) இலங்கை வந்துள்ளார்.அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் நாட்டுக்கு வந்துள்ளது.

துருக்கியின் விசேட விமானம் மூலம் இன்று காலை 6.00 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துருக்கி குடியரசின் வெளிவிவகார அமைச்சர் Mevlüt Çavuşoğlu, 2022 ஜனவரி 28-30 திகதிகளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் மாலைதீவுக் குடியரசிற்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக துருக்கிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும், தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களும் கலந்துரையாடலின் போது   விவாதிக்கப்படும்.

துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இன்று விஜயத்தை நிறைவு செய்து பிற்பகல் 3.15 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...