சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு இம் மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இம் மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பத்திலோ பால்மாவை கொண்டு வரும் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாக குறித்த சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையை அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்தனர்.