இலங்கை உதைபந்தாட்ட வீரர் மாலைதீவில் காலமானார்!

Date:

இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராகவும்,இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார்.இப் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இவ் வருடத்திற்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் ரன்னரப்பாக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...