ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் விட்டின் மீது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்

Date:

இன்று அதிகாலை 2.10 அளவில் பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்கு பிரவேசித்த நான்கு பேர் கொண்ட குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்தார்.

வெள்ளை சிற்றூர்ந்தொன்றில் வந்த குழுவினர், குடியிருப்பின் பிரதான நுழைவாயிலை பலவந்தமாக திறந்து, அங்கிருந்தா பாதுகாப்பு உத்தியோகத்தரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நேரில் கண்ட சாட்சியத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதாக சமுதித்த சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் உடனடியாக அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் காவல்துறையினர் வந்து வீட்டுத் திட்டத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த தாக்குதல் தொடர்பான சீ.சி.ரீ.வி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...