அம்பன்வெவயில் 12 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 2022 பெப்ரவரி 13 ஆம் திகதி குருநாகல் சியம்பலகஸ்கொடுவவில் இடம்பெற்றது. Zam Zam நிறுவனம், சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவுடன் இணைந்து (Help a Nest) ஹெல்ப் எ நெஸ்ட் திட்டத்தின் மூலம் வீடுகளை நிர்மாணிப்பதில் உதவியது.
குளியாபிட்டிய நகரசபையின் தலைவர் விஜயசிறி ஏகநாயக்க மற்றும் சியம்பலகஸ்கொடுவ பைத்துஸ் ஜகாத் குழுவின் உதவியினால் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் Zam Zam நிறுவனத்தின் தலைவர் யூசுப் முப்தி கலந்து கொண்டார். Zam Zam நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், சமூகத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் நலம் விரும்பிகள், சமூகத்தின் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.