கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சமூக ஆர்வலர்களுக்கான பாராட்டு விழா!

Date:

கம்பஹா கல்வி வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்துக்காக செயற்பட்டுவரும் கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு சமூக ஆர்வலர்களைப் பாராட்டும் விழாவும், 2022 ஆம் வருடத்துக்கான செயற்திட்ட முன்வைப்பு நிகழ்வும் கடந்த ஞாயிறு (20) திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவரும், கம்பஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களுக்கான தமிழ் மொழி மூல பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு. M.T.M. தெளஸீர் நளீமி தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் இம் மன்றத்தின் பணிகளுக்கு பங்களிப்புச் செய்த அனுசரணையாளர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கம்பஹா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயலாளரும் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் அதிபருமான திரு. M.A.M. அஸாமின் நிகழ்ச்சி நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற இவ் விழாவில் கம்பஹா வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

உடுகொட அரபா மகா வித்தியாலய ஆசிரியர் திரு. M.M.M. முஹிதீனின் கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவின் வரவேற்புரை குமாரிமுள்ள முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் திரு. M.K.R. முஹம்மதினால் நிகழ்த்தப்பட்டது. கம்பஹ கல்வி அபிவிருத்தி மன்றத்தின் இரு வருட கால சாதனைகளை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் திரு. M.A.M.M. அஸ்மிர் முன்வைத்ததோடு, அதன் 2022 ஆம் ஆண்டுக்கான அமுலாக்கல் திட்டத்தை அதன் தலைவர் சபைக்கு சமர்ப்பித்தார். இறுதியாக கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய அதிபர் திரு. M.M.M. ஸர்ஜூனின் நன்றியுரையோடு விழா நிறைவு பெற்றது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...