சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று வாக்கு மூலம்!

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று (12) வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சஹ்ரான் ஹசீமின் மனைவி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வாக்கு மூலம் வழங்க அனுமதிக்குமாறு விசேட புலனாய்வுப் பிரிவினர் கடந்த 10 ஆம் திகதி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதன்படி குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

மேலும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சென்று உரிய வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ஜனனி வீரதுங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும்...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி...