திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான சுருக்குவலை அனுமதிப்பத்திரங்களை உடனடியாக வழங்கவும் -நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

Date:

திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான சுருக்குவலை அனுமதிப்பத்திரங்களை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.வியாழன் (10)இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுருக்குவலைக்கான அனுமதி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.இருந்தும் இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் இந்த அனுமதி பத்திரங்களை விநியோகிப்பதற்கான அனுமதி திருகோணமலை மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளருக்கு வழங்கப்படடடவில்லை.

கடைசியாக 2019 ஆம் ஆண்டே இந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.கடந்த இரண்டு வருடகாலமாக இந்த அனுமதி கிடைக்காததால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.இதனால் பலர் கடற்படையினரால் கைதும் செய்யப்படுகின்றனர்.

எனவே புத்தளம் மற்றும் மன்னார் பகுதிகளை போன்று திருகோணமலையிலும் இந்த அனுமதி பத்திரங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைளுக்கு அனுமதியை வழங்குமாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...