அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பு மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றைய நாட்களில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மாத்திரமே மின்சாரம் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஜனக்க ரத்னநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம்(21) அறிவிக்கப்பட்ட நேரத்தை மீறி சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன .