இன்றைய தினம் மின் துண்டிப்பு அமுல்; அட்டவணை வெளியானது!

Date:

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைய தினம் (23) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அதன்படி, முன்னதாக வௌியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி முறையில் 4.40 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், ஏனைய குழுக்களுக்கு குறித்த காலப்பகுதியில் 4.30 மணித்தியால மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.இதேவேளை, பொதுப் பயன்பாட்டு திணைக்களம் மின்வெட்டு நேர அட்டவணையை வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, நாளை பிற்பகல் 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை சுழற்சி முறையில் குறித்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...