கொவிட்-19 நோய்த்தொற்றின் பிரேத பரிசோதனைக்கான செயல்முறையை மறுஆய்வு செய்யும் புதிய சுற்றறிக்கையை சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
சுற்றறிக்கையின்படி, மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பிரேத பரிசோதனை அதிகாரியின் விருப்பத்திற்கு அமைய பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.