இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் 4 ஆயிரத்து 677 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நாளொன்றில் அதிகளவான சுற்றுலா பயணிகளின் வருகை டிசம்பர் மாதம் 25ஆம் திகதி பதிவானது.குறித்த தினத்தில் 4 ஆயிரத்து 829 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 39 ஆயிரத்து 621 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.